மக்களுக்கு உதவுவதற்காக நடிகர் விஜய் எடுத்த அடுத்த முடிவு! என்ன தெரியுமா?
'தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை நடத்தி வரும் நடிகர் விஜய் மக்களுக்காக புதிய விடயம் ஒன்றை செய்யவுள்ளார்.
மக்களுக்கு உதவ வழக்கறிஞர்கள்
நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக அறிவித்தார்.
அவர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், 2026 -ம் ஆண்டில் தான் போட்டியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அண்மையில் இரண்டு கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது தான் நமது முதற்கட்டப் பணியாகும் என்று கூறியிருந்தார்.
அதன்படி, நடிகர் விஜய் கட்சியின் அரசியல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மக்களுக்கான சட்ட ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், மக்களுக்கு சட்ட உதவிகளை வழங்க காவல் நிலையங்களை கணக்கிட்டு தலா 2 வழக்கறிஞர்களை நியமிக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
அதாவது காவல் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்களுக்கு தேவையான சட்ட உதவிகளை தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர்கள் வழங்குவார்கள்.
இதற்கான வேலைகளை இந்த வாரத்திற்குள் முடித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |