விஜய் மற்றும் உதயநிதி ஆகியோர் இந்து விரோத தீய சக்தி.., ஹெச்.ராஜா தாக்கு
விஜய் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி இந்து விரோத தீய சக்தி என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
ஹெச்.ராஜா பேசியது
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேறி உள்ளது. இதனை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.
அந்தவகையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், பாஜக அரசால் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா, இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கைகளையும் அரசியலமைப்பின் மாண்பையும் மீண்டும் ஒருமுறை கேள்விக்குள்ளாக்கியது.
இந்த வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, "விஜய்யின் வீட்டை வக்பு வாரியம் கேட்டிருந்தால் வக்பு வாரிய சட்ட திருத்தத்துக்கு எதிராக போராடுவாரா? சட்டத்தை பற்றி தெரியாத நடிகர் நாடகம் ஆடுகிறார்.
வெறும் சினிமாவில் நடித்து காசு சம்பாதிப்பதை தொழிலாக கொண்டுள்ளார். அவர் மிகப் பெரிய இந்து விரோத தீய சக்தி என்பதை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.
மேலும் பேசிய அவர், "இந்தியா முழுவதும் உதயநிதிக்கு எதிராக வழக்குகள் உள்ளன. அவரை சிறையில் அடைக்கும் நாள் தான் இந்துக்களுக்கான வெற்றி. அவரும் இந்து விரோத தீய சக்தி" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |