என்ன பண்ணனும்னு அவருக்கு தெரியும்.., உதயநிதியை வாழ்த்திய விஜய் ஆண்டனி
தமிழகத்தில் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் விஜய் ஆண்டனி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்று சில மாதங்களாக தகவல்கள் பரவி வந்த நிலையில், நேற்று அவர் துணை முதலமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.
இதனால், தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும், துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
விஜய் ஆண்டனி வாழ்த்து
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியிடம், உதயநிதியின் துணை முதலமைச்சர் பதவி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், "தமிழகத்தின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். அவர் மக்களுடன் எளிமையாக பழக கூடியவர்.
அவர் சிறு வயதில் இருந்தே எல்லாமே பார்த்திருப்பார். தாத்தா மற்றும் தந்தையிடம் இருந்து அனுபவத்தை பார்த்திருப்பார்.
என்ன பண்ணனும், என்ன பண்ண கூடாது என்று அவருக்கு தெரியும். திறம்பட ஆளுவார் என்று நினைக்கிறேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |