மீராவின் மரணம் தொடர்பில் வைரமுத்து வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு
பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது இரங்களையும் வெளியிட்டுள்ளார். அந்த பதிவானது தற்போது வைரலாகி வருகின்றது எனலாம்.
தற்கொலை
இவருடைய மூத்த மகளான மீரா என்பவர் இன்று அதிகாலை 3 மணியளவில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக தெரியவந்துள்ளது.
வழக்கம்போல தூங்குவதற்கு சென்ற மீரா, காலையில் பார்க்கும் போது தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்தள்ளது. அவரது உடலை மீட்டு வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போது தான் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.
வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவு
கொலை என்பது
— வைரமுத்து (@Vairamuthu) September 20, 2023
மனிதன் மீது
மனிதன் காட்டும் எதிர்ப்பு
தற்கொலை என்பது
சமூகத்தின் மீது
மனிதன் காட்டும் எதிர்ப்பு
விஜய் ஆண்டனி
மகளின் தற்கொலை
சமூகத்தை எந்தப் புள்ளியில்
எதிர்க்கிறது என்பதைக்
கண்டறிந்து களைய வேண்டும்
ஒரு பூ
கிளையிலேயே
தூக்கிட்டுக் கொள்வது
எத்துணை பெரிய சோகம்…
இந்த பதிவானது அனைவரது மனைதையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |