ரொம்ப வலிக்குது.. மகள் குறித்து விஜய் ஆண்டனியின் மனைவி வெளியிட்ட உருக்கமான பதிவு!
பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் தனது மகளின் பிரிவால் வாடும் நடிகர் விஜய் ஆண்டனியின் மனைவி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
மகளின் தற்கொலை
இவருடைய மூத்த மகளான மீரா என்பவர் செப்டம்பர் மாதம் அதிகாலை 3 மணியளவில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
அவரது உடலை மீட்டு வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போது தான் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரியவந்தது.
இவரின் பிரிவால் விஜய் ஆண்டனியின் குடும்பம் மாத்திரமின்றி முழு திரையுலகமே துக்கத்தில் இருந்தது.
இந்நிலையில் விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா தற்போது வருதத்துடன் ஒரு ட்விட்டை பதிவேற்றியுள்ளார்.
வெளியிட்ட பதிவு
MeeraThangam ur piano waits and longs for ur touch,as we r all still in disbelief,ur gone too soon baby,May be this world is not for you,but Amma is yet here,can’t understand the concept between life and death I’ve blanked outUntil I meet u eat well and stay happy,laara misses? pic.twitter.com/Uif0x8lNQC
— Fatima Meera Vijay Antony (@mrsvijayantony) December 10, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |