பிள்ளைங்கள free-யா விட்ருங்க: தற்கொலை குறித்து உருக்கமாக பேசிய விஜய் ஆண்டனி
பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் மகளின் தற்கொலை குறித்து நடிகர் விஜய் ஆண்டனி பேசியது வைரலாகி வருகிறது.
மகளின் தற்கொலை
இவருடைய மூத்த மகளான மீரா என்பவர் இன்று அதிகாலை 3 மணியளவில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக தெரியவந்துள்ளது.
வழக்கம்போல தூங்குவதற்கு சென்ற மீரா, காலையில் பார்க்கும் போது தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்தள்ளது. அவரது உடலை மீட்டு வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போது தான் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து தற்கொலை தொடர்பாக விஜய் ஆண்டனியின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் பள்ளியில் படிக்கும் நண்பர்களிடம் விசாரணை நடத்தப்பட இருக்கிறது. இவர் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகின்றார் என்றும் இவருக்கும் வயது 16 தான் ஆகின்றது என்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மகளின் பிரிவில் இருக்கும் விஜய் ஆண்டனி ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.
விஜய் ஆண்டனி பேச்சு
“தற்கொலை தொடர்பான எண்ணங்கள் நிறைய பேருக்கு வருகிறது என்று கேள்வி பட்டு இருக்கிறேன். நிறைய பேருக்கு அது பணப்பிரச்சினையால் வருகிறது. அதே போல அதிக அளவு, யார் மீதாவது நம்பிக்கை வைத்து ஏமாற்றப்படும் போது அது நடக்கிறது.
பள்ளிக்குழந்தைகள் படிப்பினால் ஏற்படும் அழுத்தம் காரணமாக தற்கொலைகள் நடக்கின்றன. பள்ளி முடிந்து வந்த உடன் இன்னொரு வகுப்பிற்கு செல்கிறார்கள். நாள் முழுக்க அவர்களுக்கு சிந்திக்க நேரமில்லாமல் போய் விடுகிறது. இதற்கு சுற்றி உள்ளவர்கள் காரணமாக இருக்கிறார்கள்.
குறிப்பாக பெற்றோர்கள். குழந்தைகளை பொருத்த வரைக்கும் அவர்களை கொஞ்சம் விட்டு விடுங்கள். நீங்கள் மற்றவர்களின் அங்கீகாரத்தையும் அன்பையும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்காதீர்கள். நீங்கள் உங்களை காதலியுங்கள்.” என்று பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |