இந்த விஷயத்தில் விஜயகாந்துக்கு பிறகு விஜய் ஆண்டனிதான்: தயாரிப்பாளர் புகழாரம்
தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் வரக்கூடாது என்று நினைப்பதில் விஜயகாந்துக்கு பிறகு நடிகர் விஜய் ஆண்டனி தான் என தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா கூறியுள்ளார்.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு
நடிகர் விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிப்பில் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் உருவான 'ரத்தம்' திரைப்படம் அக்டோபர் 6 ஆம் திகதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், நேற்று மாலை இந்த திரைப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது இளைய மகள் லாராவுடன் வந்திருந்தார்.
விஜயகாந்துக்கு பிறகு விஜய் ஆண்டனி
அப்போது பேசிய தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, "நான் படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டேன். அந்த நம்பிக்கையில் கூறுகிறேன். படம் திருப்தியாக இருக்கிறது. இசையமைப்பாளர் நல்ல இசையை கொடுத்திருக்கிறார்.
நந்திதா, மஹிமா, நிழல்கள் ரவி ஆகியோர் படத்தில் சிறப்பாக செய்துள்ளனர். தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படக்கூடாது என்பதற்காக 24 மணி நேரம் கால்ஷீட் கொடுப்பது விஜயகாந்துக்கு பிறகு விஜய் ஆண்டனிதான்.
இந்த கடினமான சூழ்நிலையிலும் அவர் வந்திருப்பது, அவரின் பண்பை காட்டுகிறது. அவர், இன்னும் பல உயரங்களை தொட வேண்டும். அதற்கு எனது வாழ்த்துக்கள்" எனக் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |