குடும்பத்துல பிரச்சனைனா அடுத்தவன கூப்பிடாதீங்க..கும்மி அடிச்சு கதைய முடிச்சிருவாங்க..பிரபல தமிழ் நடிகரின் பதிவு
குடும்பத்தில் பிரச்சனை என்றால் ஊடகங்களை நாடாமல் உங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் - விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனியின் பதிவிற்கு குழப்பத்தில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வரும் ரசிகர்கள்
நடிகர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை பிரபல தம்பதி அர்ணவ் - திவ்யா இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் கூறி வருகின்றனர். இருவரது தரப்பிலும் அடுக்கடுக்கான ஆதாரங்களை காட்டி வருவது ஊடகங்களில் பேசு பொருளாகியுள்ளது.
இந்த நிலையில் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனை என்றால் முடிந்த வரைக்கும் உங்களுக்குள் அடித்துக்கொள்ளுங்கள்.. இல்ல விட்டு விலகிடுங்க. இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க. அடுத்தவன மட்டும் கூப்புடாதிங்க.. கும்மி அடிச்சி, கதைய முடிச்சிருவாங்க' என தெரிவித்துள்ளார்.
அவர் யாரை குறிப்பிட்டு இந்த பதிவை வெளியிட்டுள்ளார் என்பது தெரியவில்லை. இதனால் அவரது ரசிகர்களும், அவரை பின்தொடர்பவர்களும் குழப்பத்தில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனன்னா, முடிச்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சிக்கங்க, இல்ல விட்டு விலகிடுங்க, இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க?
— vijayantony (@vijayantony) October 11, 2022
அடுத்தவன மட்டும் கூப்புடாதிங்க???
கும்மி அடிச்சி, கதைய முடிச்சிருவாங்க?