"அவளுடன் நானும் இறந்துவிட்டேன்" தனது மகள் குறித்து விஜய் ஆண்டனி வெளியிட்ட உருக்கமான பதிவு!
பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் தனது மகளின் மறைவு குறித்து நடிகர் விஜய் ஆண்டனி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவானது அனைவரையும் மீண்டும் கண்கலங்க வைத்துள்ளது.
வெளியிட்ட பதிவு
"அவள் இப்போது, இந்த உலகைவிட சிறந்த ஜாதி மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்க்குதான் சென்று இருக்கிறாள். என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன்." என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
— vijayantony (@vijayantony) September 21, 2023
மகளின் இறப்பால் மனம் உடைந்து இருந்த விஜய் ஆண்டனி, இறுதி கிரியை முடிந்தவுடன் அவரது சமூக வலைத்தளத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்து இருந்த கருத்தானது மிகவும் உணர்ச்சி பூர்வாக இருந்துள்ளது. இதற்கு பலரும் தங்களது இரங்களை தெரிவித்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |