இளைய மகளுடன் வந்த விஜய் ஆண்டனி... வைரலாகும் வீடியோ!
பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தையடுத்து அவர் முதலில் கலந்துக்கொண்ட ஒரு திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜய்
ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர் விஜய் ஆண்டனி.
ஏறத்தாழ 40 க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய விஜய் ஆண்டனி 'நான்' திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி பல திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் இவரது மகள் கடந்த வாரம் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அவரை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து அவர் நடித்துக்கொண்டிருந்த ஒரு திரைப்படத்திற்கு விளம்பரம் செய்வதற்காக தனது இளைய மகளுடன் கலந்துக்கொண்டுள்ளார். இது சம்பந்தமான ஒரு வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட விஜய்
ஆண்டனி மகள் இறந்து 10 நாட்களில் விஜய் ஆண்டனி கடமை தவறாமல் தான் நடித்த படத்தின் விளம்பர பணிக்கு வருகை தந்துள்ளார். இதில் நடிகர் விஜய் ஆண்டனி தனது இளைய மகள் லாராவுடன் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பின் பிரபல ஊடகம் ஒன்றிருக்கு விஜய் ஆண்டனி பேட்டியும் அளித்துள்ளார்.
அதில் “நான் என் வாழ்க்கையில நிறைய பாத்துட்டேன். சிறுவயதிலிருந்தே நிறைய சந்தித்து விட்டேன். சில பேர் தன் வாழ்க்கையில் அனுபவித்த சிரமங்களை மற்றோருக்கு கொடுக்க நினைப்பார்கள். சிலர் அதை பாசிட்டிவ் நோக்கத்தில் போக வேண்டும் என்றும் நினைப்பார்கள். எல்லாமே நமக்குள் தான் இருக்கிறது.
என்னுடைய நோக்கம் அடுத்தவர்களை மகிழ்வித்து பார்ப்பது தான். உங்களுடைய ரோல் மாடல் யார் என்று நீங்கள் தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை எல்லாம் நமக்குள்ளே தான் இருக்கிறது. என்னவோ ஒரு மாதிரி இருக்கிறேன்.
நிறைய காயம் பட்டு பட்டு மரத்துப் போவது போல் மாறிவிட்டது. ஒரு அப்பாவாக தன் பிள்ளைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைப்பது இயல்பு. அது அனைத்திற்குமே அனுபவம் தேவை. வாழ்க்கையோடு பல திசைகளை பார்த்திருக்கிறேன்.
வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்தையும் மறக்க வேண்டிய அவசியமில்லை. நினைவுகள் மனது வழியாக வந்து யோசிக்க வைக்கிறது என்றால் யோசியுங்கள் தப்பில்லை. மறக்க யோசிக்க வேண்டாம். நம் வாழ்க்கையை ஞாபகம் தான். நான் எதையும் மறக்க முயற்சி செய்ய மாட்டேன். ஏதாவது வலி ஏற்பட்டால் அந்த வலியோடு வாழ நினைப்பேன் ” என தெரிவித்துள்ளார்.
மேலும் மீராவின் மறைவிற்கு பிறகு விஜய் ஆண்டனி கலந்துக்கொண்ட முதல் நிகழ்ச்சி என்றால் இதைக்கூற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |