அநீதி, அராஜகம், தில்லுமுல்லு - திமுகவை கிண்டலடித்த விஜய்

Vijay DMK Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Feb 02, 2026 08:06 AM GMT
Report

அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு என விஜய் பேசியுள்ளார்.

தவெக 3வது ஆண்டு தொடக்க விழா

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 3வது ஆண்டு தொடக்க விழா, சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 

அநீதி, அராஜகம், தில்லுமுல்லு - திமுகவை கிண்டலடித்த விஜய் | Vijay Criticize Dmk In Tvk 3Rd Year Anniversary

இதில் தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கொள்கை தலைவர்களின் புகைப்படங்களுக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

அதன் பின்னர் பேசிய தவெக தலைவர் விஜய், "தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் மிகப்பெரிய கட்சியாக வளர்ந்திருப்பதற்கு காரணம் தொண்டர்கள் தான். தமிழக வெற்றிக்கழகத்தின் வளர்ச்சிக்கு தலைமை தொண்டனாக எனது வாழ்த்துகள்.

காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் போன்ற தலைவர்கள் அமர்ந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களா என மக்கள் கண்ணீர் சிந்துகின்றனர். அந்த கண்ணீரை துடைக்க துவங்கப்பட்ட கட்சிதான் தவெக.

எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போது சட்டசபையில் கேலி செய்தனர். அவருக்கு என்ன அனுபவம் உள்ளது? பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை. திரைக்கவர்ச்சியை வைத்து அரசியலுக்கு வந்துள்ளார், கேள்விக்கு கேட்க மட்டும் தான் தெரியும் என விமர்சித்தார்கள்.

அநீதி, அராஜகம், தில்லுமுல்லு

இதையெல்லாம் அமைதியாக கவனித்த மக்கள் என்ன செய்தார்கள் என்பதும் உங்களுக்கு தெரியும். இப்போது நாம் கட்சி தொடங்கிய போதும் அதே தான் பேசுறாங்க. 

அநீதி, அராஜகம், தில்லுமுல்லு - திமுகவை கிண்டலடித்த விஜய் | Vijay Criticize Dmk In Tvk 3Rd Year Anniversary

அந்த தேஞ்சுப் போன, துருப்பிடிச்சு போன Weapon-ஐ இப்போதும் எடுக்குறீங்களே கொஞ்சம் உங்க டெக்னிக்கை மாத்துங்க. பவளவிழா பாப்பாவிற்கு என்ன தெரியும் பழைய டப்பாவை தான் உருட்ட தெரியும்.

ஆனால், அதற்காக எல்லாம் அவர்கள் செய்யும் தவறுகளை, ஊழல்களை சொல்லிக் காட்டாமல் இருக்க முடியாது. மக்களுடைய ஒரே பிரதிநிதி தவெக மட்டும்தான். திமுகவை தொடர்ந்து நாம் விமர்சனம் செய்வோம்.

திருவள்ளுவர் இந்த டிஜிட்டல் உலகத்தில் இருந்திருந்தால், "அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு” என திருக்குறள் எழுதியிருப்பார்.


தவெக தான் டாப் இன்ஜின்

கருத்துக்கணிப்பு எடுத்தால் ஒவ்வொரு வீட்டிலும் தவெக உள்ளது. முன்னதாக கட்சி நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் சிலரின் செயல்களால் தன்னால் நிம்மதியாக தூங்க கூட முடியவில்லை என முதல்வர் தெரிவித்திருந்தார். 

அநீதி, அராஜகம், தில்லுமுல்லு - திமுகவை கிண்டலடித்த விஜய் | Vijay Criticize Dmk In Tvk 3Rd Year Anniversary

ஆனால் என்றாவது ஒருநாள் முதல்வர் நன்றாக தூங்கும் போது அவரை எழுப்பி எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என கேட்டால் விசில் சின்னத்திற்கு என சொல்லுவார். 

தமிழக தேர்தல் களத்தில் மும்முனைப் போட்டி, நான்குமுனை போட்டி என்றெல்லாம் சொல்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்கிறேன். இங்கே மாபெரும் மக்கள் சக்தி கூட்டணி, திமுக கூட்டணி, பாஜக தலைமையில் மற்றும் பலர் கூட்டணி தான் இருக்கிறது.

இதில், திமுகவை வீழ்த்த மாபெரும் மக்கள் சக்தியான தவெகவால் மட்டும் தான் முடியும். இது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல. இதுதான் கள நிலவரம். தமிழக மக்களுக்கு தவெக தான் இப்போது இருக்கும் ஒரே ஆப்ஷன். வேறு எந்த டைவர்ஷனும் அவர்களுக்கு இல்லை. 

அநீதி, அராஜகம், தில்லுமுல்லு - திமுகவை கிண்டலடித்த விஜய் | Vijay Criticize Dmk In Tvk 3Rd Year Anniversary

அதனால் டப்பா இன்ஜின், ஓட்டை இன்ஜின் என எது வந்தாலும் தவெக தான் டாப் இன்ஜின். தவெகவினர் இன்னும் கூர்மையாக வேலை செய்ய வேண்டும். ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

தமிழக மக்கள் குடும்பம் குடும்பமாக நம்முடன் இருக்கிறார்கள. அவர்களை தவெகவுக்கு ஓட்டுப்போட வைப்பதே உங்கள் வேலை. மற்றதை மக்களோடு சேர்ந்து நான் பார்த்துக் கொள்கிறேன்" என பேசினார். 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US