தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால்? விஜய் எடுத்திருக்கும் அசாத்திய முடிவு..கசிந்த தகவல்
தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால், அரவிந்த் கெஜ்ரிவால் பாணியை கையில் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக வெற்றி
சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்ற விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு, பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 12 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

இதற்காக கட்சித் தலைவர் விஜய் பிற கட்சிகளிடம் ஆதரவு கேட்டும் நிலை உருவாகியுள்ளது.
ஆனால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற நிபந்தனை விதிக்கப்படும் பட்சத்தில், தமிழக வெற்றிக் கழகத்தினால் தனித்து இயங்க முடியாது.
எனவே, 2 வார காலம் அவகாசமே உள்ள நிலையில், விஜய் தனது நிர்வாகிகளிடம் 'நிபந்தனையுடன் ஆதரவு கரம் நீட்ட வந்தால் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டாம்' என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் மீண்டும் தேர்தல் வந்தாலும், இதைவிட அதிக இடங்கள் நமக்கு கிடைக்கும் என்றும் அவர் பேசியதாக கூறப்படுகிறது.
கெஜ்ரிவால் யுக்தி
இதன்மூலம் 2015ஆம் ஆண்டில் அரவிந்த் கெஜ்ரிவால் கையில் எடுத்த யுக்தியை விஜய்யும் எடுத்திருப்பதாக தெரிகிறது.
2013-யில் டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிட்டு வெற்றி பெற்றது. ஆனால், ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
பின்னர் ஜன லோக்பால் மசோதாவை சட்டசபையில் நிறைவேற்ற முடியாமல் போனதால், அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகினார்.
ஆனால், 2015யில் மீண்டும் நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி தனித்து போட்டியிட்டு வென்று ஆட்சியைப் பிடித்தது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |