விநாயகர் சதுர்த்திக்கு திரைப்படம் வெளியிடும் விஜய்க்கு வாழ்த்து கூற மனமில்லையா? பாஜக கேள்வி
விநாயகர் சதுர்த்தியையொட்டி திரைப்படத்தை வெளியிட்டு சம்பாதிக்கும் விஜய்க்கு வாழ்த்து கூற மனமில்லையா என்று பாஜக மாநிலச் செயலாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் பேசியது
பழநியில் நேற்று பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "பழநி அடிவாரப் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை பற்றி திமுக அரசுக்கு கவலையில்லை. பெருந்திட்டம் என்ற பெயரில் யாரிடமும் ஆலோசனை மேற்கொள்ளாமல் மக்கள் பாதிப்படையும் வகையில் செயல்படுகிறார்கள். இவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.
நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்தியையொட்டி திரைப்படத்தை வெளியிட்டு கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார். ஆனால், விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துக் கூற மனமில்லையா?
தனி நபராக அவர் வாழ்த்து தெரிவிப்பதும், தெரிவிக்காததும் அவரது விருப்பம். ஆனால், கட்சியின் தலைவராக விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதது ஏன் என்று மக்கள் கேள்வி கேட்பார்கள்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |