தியேட்டரில் திருமண நிச்சயதார்த்தம் செய்த விஜய் ரசிகர்: லியோ FDFS -ல் நடந்த சம்பவம்
லியோ படத்தின் முதல் காட்சியின் போதே திரையரங்கில் வைத்து விஜய் ரசிகர் ஒருவர் தனது காதலியுடன் நிச்சயதார்த்தம் செய்யும் புகைப்படம் வரையாகி வருகிறது.
லியோ திரைப்படம்
நடிகர் விஜய் நடித்துள்ள விஜய் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்திய மாநிலம் கேரளாவில், அதிகாலை 4 மணிக்கே வெளியான நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் காலை 9 மணிக்கு வெளியானது.
அந்தவகையில், விஜய் ரசிகர்கள் லியோ படத்தை தியேட்டருக்கு சென்று கொண்டாடி வருகின்றனர். படத்தின் முதல் பாதியை விட இரண்டாவது பாதி லேக் ஆகியுள்ளது என சில ரசிகர்கள் கூறியுள்ளனர்.
தியேட்டரில் நிச்சயதார்த்தம்
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற விஜய் ரசிகர் ஒருவர் தனது காதலியுடன் லியோ படத்தின் முதல் காட்சியினை திரையரங்கிற்கு பார்க்க வந்துள்ளார்.
அப்போது அவர், படம் ஆரம்பித்தவுடன் ரசிகர்கள் முன்னிலையில் தனது காதலிக்கு மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.
திருமணத்திற்கு முன்பு உறவினர்கள் முன்னிலையில் நடைபெறும் நிச்சயதார்த்த்தை தியேட்டரில் செய்து கொண்ட போது, ரசிகர்கள் ஆரவாரம் செய்து அவர்களை வாழ்த்தினர். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |