நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சொத்துக்கள் ஜப்தி! கண்டுகொள்ளாத விஜய்?
இயக்குனரும், நடிகரின் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரின் வீட்டை ஜப்தி செய்ய எழும்பூர் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எஸ்.ஏ.சந்திரசேகர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் வசிக்கிறார். கடந்த 2011ம் ஆண்டு வெளியான 'சட்டப்படி குற்றம்' படத்தின் விளம்பர செலவுக்காக ரூ.76,112 ரூபாயை வழங்காததை தொடர்ந்து அந்த விளம்பர உரியாமையாளர் சரவணன் என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பணத்தை சந்திரசேகர் செலுத்தாததால் அவருக்கு சொந்தமாக சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் உள்ள ஏசி, டேபிள், பேன் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து சாலிகிராமத்தில் உள்ள எஸ்.ஏ.சந்திரசேகரின் வீட்டை ஜப்தி செய்ய அதிகாரிகள் சென்றபோது ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் கோர்ட் உத்தரவை அமல்படுத்த பொலிசாரின் உதவி கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் தற்போது தமிழ் திரையுலக வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் திரை உலகில் மாஸ் நடிகராக வலம் வரும் விஜய் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார். ஆனால் அவரின் தந்தை ரூ. 76 ஆயிரம் பணத்தை இத்தனை வருடங்கள் கடன் பாக்கி வைத்திருப்பது பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த விடயத்தில் விஜய் உதவவில்லையா என்றும், என்னதான் பிரச்சனை இருந்தாலும் அப்பாவிற்கு ஒரு கஷ்டம் என்றால் அவர் கண்டும் காணாமல் இருப்பது ஏன் என்ற விமர்சனங்களும் எழுந்து வருகிறது.
thepostreader