ரூ.200 கோடி வாங்கும் நடிகர் விஜய்.., அவர் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நடிகர் விஜய் முதலில் வங்கிய சம்பளம் குறித்து அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் முன்பு ஒரு முறை தெரிவித்து உள்ளார் .
நடிகர் விஜய்
ஆரம்பத்தில் ரொமான்டிக் ஹீரோவாக வலம் வந்த விஜய், ரமணா இயக்கிய திருமலை படத்தின் மூலம் மாஸ் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.
அன்று முதல் இன்று வரை அவரின் நடிப்பிற்கு பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர் .
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் G.O.A.T படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்து ஒரேயொரு படத்துடன் சினிமாவை விட்டு விலகி முழு நேரம் அரசியலில் ஈடுபடவுள்ளார்.
இந்நிலையில், நடிகர் விஜய்யின், தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் தனது மகன் விஜய் சினிமாவில் முதலில் நடித்ததற்காக வாங்கிய முதல் சம்பளம் குறித்த தகவலை கூறியிருக்கிறார்.
விஜயின் முதல் சம்பளம்
நடிகர் விஜய், நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானாலும் , 1980 ஆம் ஆண்டு குழந்தை நடிகராக முன் எஸ்ஏசயின் படங்களில் திரையுலகில் நுழைந்தார்.
1984 ஆம் ஆண்டு அவரது தந்தை இயக்கிய வெற்றி படத்தின் மூலம் அவரது சினிமா அறிமுகமானார்.
அப்போது நடிகர் விஜய்க்கு முதலில் ரூ. 500 சம்பளம் கொடுக்கப்பட்டதாக இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்து இருக்கிறார்.
இப்போது நடிகர் விஜய்யின் உழைப்பு மற்றும் நடிப்பு திறமை படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ.200 கோடி வரை சம்பளம் வாங்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |