கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளி இளைஞர்.., மறுநாளே அரசு வேலை வழங்கிய முதல்வர்
Cm vijay fulfilled the request made by a disabled youth- கோரிக்கை வைத்த மறுநாளே மாற்றுத்திறனாளி இளைஞருக்கு அரசு வேலை வழங்கி முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணையை வழங்கினார்.
அரசு வேலை வழங்கிய முதல்வர்
சென்னை கிண்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 673 இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் நேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
முன்னதாக, விழாவில் பங்கேற்ற அவர், புதிய திறன் பயிற்சி ஆய்வகங்களைத் திறந்து வைத்தார்.
மேலும், தொழிற்தேர்வுகளில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன மின் ஆய்வகங்களை அமைப்பதற்காக Schneider நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த விழாவில், மாற்றுத்திறனாளி மாணவர் தினேஷ், தனக்கு அரசு வேலை வழங்குமாறு முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை மனு அளித்தார்.
இதையடுத்து, அடுத்த நாளே தினேஷுக்கு அரசு வேலை வழங்கி முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணையை வழங்கினார்.
அவருக்கு திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிமனை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று (28.10.2026) கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில், மாற்றுத்திறனாளி திரு. வீ. தினேஷ் அவர்கள் வேலைவாய்ப்பு கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவை உடனடியாகப் பரிசீலனை செய்து, இன்று (29.10.2026) அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வாயிலாக, திருவொற்றியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் Workshop Assistant பணிக்கான நியமன ஆணையைத் தனது கரங்களால் வழங்கியுள்ளார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ! ஒரு சாமானிய மாற்றுத்திறனாளியின் கோரிக்கைக்குச் செவிசாய்த்து, அவரது வாழ்க்கையில் நம்பிக்கையை விதைத்திருக்கிறார் முதல்வர் !
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) October 29, 2026
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |