வெற்றி சான்றிதழைப் பெற புறப்படுகிறார் தவெக தலைவர் விஜய்
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதன்படி, பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 மையங்களில் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் மொத்தமுள்ள 234 இடங்களில் 113 இடங்களில் தவெக முன்னிலை பெற்றுள்ளது.

பெரம்பூர், திருச்சி கிழக்கில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
இந்நிலையில், வெற்றி சான்றிதழ் பெற லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு விஜய் செல்கிறார்.
வெற்றி சான்றிதழை பெற்றபின் அடையாறில் உள்ள பெற்றோரை விஜய் சந்திக்க உள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |