விஜயின் The Goat படத்தின் 4 நாட்கள் வசூல்: எவ்வளவு தெரியுமா?
விஜய் நடிப்பில் வெளியான The Goat படத்தின் 4 நாட்கள் வசூல் எவ்வளவு என்பதை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
விஜயின் Goat
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடித்து கடந்த செப் 5ஆம் திகதி வெளியான படம் Goat.
இந்த படத்தில் ஜெயராம், லைலா, பிரபு தேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
படம் வெளியான திகதி முதல் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் சாதனையைப் படைத்து வருகிறது.
அந்தவகையில், படம் வெளியாகி 4 நாட்கள் ஆன நிலையில் இந்த 4 நாட்களின் வசூல் எவ்வளவு என்று பார்க்கலாம்.
எவ்வளவு தெரியுமா?
படம் வெளியான முதல் 4 நாட்களில் மட்டும் ரூ. 288 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த வாரம் முழுவதும் தி கோட் படம்தான் பெரும்பாலான திரையரங்குகளில் ஓடும் என்பதால் வசூல் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, இந்த வார இறுதியில் மட்டும் வசூல் சுமார் 500 கோடி ரூபாயை தாண்ட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |