விஜய்- ஆளுநர் சந்திப்பில் நடந்தது என்ன?
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.எல்.அல்கேகருடனரை தவெக தலைவர் விஜய் சந்தித்த போது பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களை பெற்று தனிக்கட்சியாக தவெக உருவெடுத்தாலும் ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை.
நேற்று காங்கிரஸ் இணைந்த நிலையில் 112 உறுப்பினர்கள் இருக்கின்றனர், இன்னும் 6 பேரின் ஆதரவு தவெக-வுக்கு தேவைப்படுகிறது.
விசிக, இடதுசாரி கட்சிகளின் ஆதரவை கேட்டு விஜய் கடிதம் எழுதியதாக தெரிகிறது. இந்நிலையில் இன்றும் விஜய் தமிழக ஆளுநரை சந்தித்து பேசினார்.
அப்போது 112 உறுப்பினர்களை வைத்துக்கொண்டு எப்படி ஆட்சி அமைப்பீர்கள் என ஆளுநர் கேள்வி எழுப்பினாராம்.
மேலும் எந்தெந்த கட்சிகள் ஆதரவு வழங்கவுள்ளது என்பதையும் கேட்டாராம். இதற்கு விளக்கமளித்த விஜய், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதாக கூறியதாக தெரிகிறது.
இந்த பதில் ஆளுநருக்கு திருப்தி அளித்தால் இன்னும் சில மணிநேரங்களில் ஆட்சி அமைக்க அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
