நடிகர் விஜய் பட இயக்குநர் மருத்துவமனையில் கவலைக்கிடம்
பிரபலமான மலையாள படங்களை இயக்கிய இயக்குநர் சித்திக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமாக உள்ளார்.
மலையாள பட இயக்குநர்
மலையாளத் திரைப்பட இயக்குநரும் திரைக்கதை எழுத்தாளருமான சித்திக் 1989 ஆம் ஆண்டு வெளியான ‘ராமோஜிராவ் ஸ்பீக்கிங்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இவர், தமிழில் விஜய், சூர்யா, வடிவேலு நடித்த 'பிரெண்ட்ஸ்' படத்தை இயக்கி மிக பெரிய வெற்றியை கொடுத்தார். அதில், காண்ட்ரேக்டர் நேசமணி என்ற கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது.
மேலும், தமிழில் பிரசன்னா நடித்த ‘சாது மிரண்டா’, விஜய் நடித்த ‘காவலன்’, அரவிந்த்சாமி நடித்த ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தை இயக்கியதும் இவர் தான்.
இயக்குநர் சித்திக்கின் திரைப்படங்கள் அனைத்தும் நகைச்சுவை வகையில் தான் இருக்கும். தமிழில் இவர் இயக்கிய திரைப்படங்கள் பெரும்பாலும் அவரது மலையாள திரைப்படங்களின் மொழிமாற்றம் செய்தது ஆகும்.
மருத்துவமனையில் கவலைக்கிடம்
இயக்குநர் சித்திக், கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு எக்மோ சிகிச்சை கொடுப்பதாக கூறப்படுகிறது.
சித்திக்கின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள், இவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |