தவெக தலைவர் விஜய் தனியாக CBSE School நடத்துகிறார்.., அண்ணாமலை குற்றச்சாட்டு
தவெக தலைவர் விஜய் தனியாக CBSE பள்ளி நடத்துகிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்ப்பியுள்ளார்.
அண்ணாமலை கேள்வி
மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
அந்தவகையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் , மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையையும், இந்தித் திணிப்பையும் கண்டித்து அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், "மெட்ரிகுலேஷன் பள்ளியில் தமிழ் கட்டாய மொழியாக இல்லை.
ஆனால், CBSE பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இந்தி மொழி படிக்கிறார்கள். இதனால் தனியார் பள்ளி மாணவர்கள் இந்தி கற்றுக்கொள்கிறார்கள்.
இதில், மும்மொழி கொள்கையை எதிர்க்கும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனியாக CBSE பள்ளி ஒன்றை நடத்துகிறார். அந்த பள்ளி 'விஜய் வித்யாஷ்ரம்' என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.
இந்த இடத்தை ஜோசப் விஜய், 2017ம் ஆண்டிலிருந்து 2052 வரை 'எஸ்.ஏ.சந்திரசேகர்' பெயரில் இருக்கும் அறக்கட்டளைக்கு லீஸுக்கு கொடுத்துள்ளார்.
இது CBSE பள்ளி தான். இந்த பள்ளியில் இந்தி இருக்கிறது. அதேபோல, அமைச்சர் அன்பில் மகேஷின் குழந்தைகள் பிரஞ்சு படிக்கிறார்கள்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |