விஜயின் ஜன நாயகன் படப்பிடிப்பு முடிவதற்கு முன்னே 75 கோடி வசூல்.., எப்படி தெரியுமா?
நடிகர் விஜய்யின் கடைசி படம் ஜன நாயகன். இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார்.
இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக பாபி டியோல் நடிக்கிறார்.
இப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.
 
ஜன நாயகன் திரைப்படத்தில் கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, மமிதா பைஜு, டிஜே அருணாச்சலம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன் பணியாற்றி வருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங்கே இன்னும் முடியாத நிலையில், அதற்குள் வசூல் வேட்டையை ஜன நாயகன் திரைப்படம் தொடங்கி உள்ளது.
அதன்படி இப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமை பெரும் தொகைக்கு விற்பனை ஆகி உள்ளதாம்.

அந்தவகையில் ஜன நாயகன் திரைப்படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் ரூ.75 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறதாம்.
இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனை ஆனதில்லை.
முன்னதாக நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த கோட் திரைப்படம் ரூ.53 கோடிக்கு விற்பனை ஆகி இருந்த நிலையில், அதைவிட 22 கோடி கூடுதலாக ஜனநாயகன் திரைப்படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் விற்பனை ஆகி உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        