நடிகர் விஜய்யின் கடைசி படத்தின் தலைப்பு வெளியானது: இணையத்தில் வைரல்
நடிகர் விஜய் நடிக்கும் 69வது படத்தின் தலைப்பை பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகரான விஜய், தனது 69வது படத்துடன் திரையுலகிற்கு முழுக்கு போடுவதாக அறிவித்தார்.
அவர் நடிக்கும் 69வது படத்தை எச்.வினோத் இயக்குகிறார். கதாநாயகியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக பாபி தியோலும் இதில் நடிக்கின்றனர்.
தளபதி 69 என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில் படத்தின் தலைப்பு குடியரசு தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
அதன்படி விஜய்யின் கடைசி படத்திற்கு "ஜன நாயகன்" என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஜன நாயகன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முழுக்க முழுக்க அரசியல் படமாக இருக்கும் என்பதை தலைப்பே கூறுகிறது. முன்னதாக நாளைய தீர்ப்பு என படத்தின் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |