திருத்திக் கொள்ளுங்கள்! நடிகர் விஜய்யின் செயலை கண்டித்து வெளியான அறிக்கை

Vijay Leo
By Fathima Jun 17, 2023 04:53 PM GMT
Report

`லியோ' படத்தில் நடிகர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருப்பதற்கு மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை கடும் கண்டனத்துடன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 'அண்ணன் நடிகர் ஜோசப் விஜய் அவர்களே... லியோ என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறீர்கள். உங்களின் பிறந்த நாளான ஜூன் 22 அன்று 'நான் ரெடி' என்ற வரிகளை கொண்ட பாடலை லியோ படக் குழுவினர் வெளியிடப் போவதாக அறிவித்திருப்பதை சமூக வலைதளம் மூலமாக அறிந்தேன்.

அவ்வாறு வெளியிடப்பட்ட அறிவிப்பு போட்டோவில் நீங்கள் சிகரெட் புகைப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த காட்சி இடம் பெற்றிருப்பது தவறான முன்னுதாரணமாகும். இது கண்டிக்கத்தக்கது. உங்களை பல லட்சம் ரசிகர் பட்டாளங்கள் பின் தொடர்கிறது. உங்களை பின்பற்றுபவர்கள் பொதுவாக 1990, 2000 ஆண்டுகளைச் சார்ந்த இளைஞர்களாக, மாணவர்களாக இருக்கிறார்கள்.   

இப்பொழுதுதான் இவர்கள் பள்ளி - கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களாகவும். குடும்பச் சுமை காரணமாக தனது வாழ்க்கையை நடத்த வேலைக்குச் செல்பவராகவும் உள்ளனர்.  

திருத்திக் கொள்ளுங்கள்! நடிகர் விஜய்யின் செயலை கண்டித்து வெளியான அறிக்கை | Vijay Leo Poster Viral

தெரிந்தோ தெரியாமலோ அல்லது அறிந்தோ அறியாமலோ நமது இளைஞர்கள் சினிமா கொட்டகைகளில் தங்களின் தலைவர்களை தேடுகின்றனர். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அதற்குத் தடை இல்லை. உங்களைப் பின்தொடரும் நம் இளைஞர்கள் நம் தலைவன் விதவிதமாக சிகரெட் பிடிக்கிறார்... நாமும் அவ்வாறு செய்யலாம் என்று நினைக்க நிறைய வாய்ப்பு உண்டு. காரணம், சினிமாவின் தாக்கம் மக்கள் மத்தியில் பெரிதாக உள்ளது.  

யாரோ ஒரு திரைப்படத்தின் நடிகர் சிகரெட் புகைப்பதால் நாட்டில் ஒட்டுமொத்த சமுதாயம் எப்படிச் சீர்கெடும் என்ற சொத்தை வாதங்களை சிலர் பேசலாம். ஆனால், நீங்கள் யாரோ ஒரு முகம் தெரியாத நடிகர் அல்ல... நாளை தமிழகத்தை ஆள வேண்டும் என்று முனைப்பில் காய் நகர்த்தி வரும் முன்னணி நடிகர். உங்கள் துறையில் நீங்கள் தான் டாப்.  

உங்கள் துறையிலிருந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக முன்பு ஆனவர் தனது படங்களில் சிகரெட் புகைப்பது மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்காமல் சமூக ஒழுக்கத்தோடு வாழ்ந்தார். அப்படியும் அப்போது நடிகர்கள் இருந்தார்கள். இன்று உங்களைப் பார்த்து சில ரசிகர்கள் பாதிக்கப்பட்டாலும் அது உங்களுக்கு ஏற்பட்ட அவமானம்.  

திருத்திக் கொள்ளுங்கள்! நடிகர் விஜய்யின் செயலை கண்டித்து வெளியான அறிக்கை | Vijay Leo Poster Viral

இதனால் அந்த ஒரு ரசிகர் மட்டும் பாதிக்கப்பட போவதில்லை, ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கப்படும். ஒரு ரசிகர் ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து சிகரெட் புகைப்பதாக வைத்துக் கொண்டால் ஒரு நாளைக்கு 100 செலவு ஆகிவிடும். இதனால் அந்த ரசிகனின் பொருளாதாரமும் பாதிக்கப்படும்.  

தன் தலைவனின் திரைப்படம் வந்தால் பாலாபிஷேகம் செய்வது, கட்அவுட் வைப்பது, முதல் காட்சி 2 ஆயிரம் ரூபாயாக இருந்தாலும் கடன் வாங்கிப் பார்ப்பது, தங்கள் பிள்ளைகளுக்கு உங்களின் பெயரை வைப்பது, உங்களின் பிறந்தநாளில் மக்களுக்குச் சேவை செய்வது என்று உங்களுக்கு உயிரை கொடுக்க நினைக்கும் அந்த ரசிகனுக்கு நீங்கள் நல்ல கருத்துக்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து நல்வழிப்படுத்த வேண்டும். 

இந்த ஆண்டு பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு ஜூன் 22 உங்களின் பிறந்த நாளை முன்னிட்டு உதவிகளை வழங்க ஏற்பாடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. அப்படிப்பட்ட மாணவர்களுக்கு நீங்கள் நல்ல முன்னுதாரணமாக இருக்க வேண்டும். நீங்கள் தற்போது நடித்து வரும் லியோ படத்தில் ஒரு காட்சியில் மட்டுமே புகைப்பிடிப்பது போன்ற காட்சி இருந்தாலும் அந்த காட்சியை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சமூகத்தின் மீது அக்கறை இருந்தால் நீங்கள் உங்களை திருத்திக்கொள்ளுங்கள், இல்லையேல் திருத்தப்படுவீர்கள்' என்று தெரிவித்துள்ளார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US