லண்டனில் முதல்வர் விஜய்யை பார்க்க குவிந்த கூட்டம் - ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சி ரத்து
cm vijay london fans meet cancelled after fans gathered in streets: லண்டனில் முதல்வர் விஜய்யை பார்க்க அவர் தங்கியுள்ள ஹொட்டல் முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ள நிலையில், ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனில் முதல்வர் விஜய்யின் நிகழ்ச்சி ரத்து
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்க்க 5 நாள் பயணமாக பிரித்தானியாவிற்கு சென்றுள்ளார். லண்டன் சென்ற முதல்வர் விஜய்க்கு பிரித்தானிய வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர்.

இந்த பயணத்தின் ஒருபகுதியாக சில்வர்ஸ்டோர் சர்க்யூட் மைதானத்தில், நடிகர் அஜித் கலந்துகொண்ட கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க உள்ள இந்த பயணத்தில், சுமார் ரூ.12,300 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக முதல்வர் அலுவகம் தெரிவித்துள்ளது.

முதல்வர் விஜய் லண்டனில் உள்ள உயரமான கட்டிடமான 'தி ஷார்ட்' ல் தங்கியுள்ளார்.
முதல்வர் விஜய் கார் பந்தயத்தை காண வந்த போது அங்கு அவரை சந்திக்க ஏராளமான ரசிகர்கள் குவிய தொடங்கினர்.
அப்போது முதல்வர் விஜய்யின் தணிப்பாதுகாவலரான மூஸா, இங்கு காத்திருக்க வேண்டாம். செப்டெம்பர் 15 ஆம் திகதி வாருங்கள். ரசிகர்கள் சந்திப்பு உள்ளது என கூறியிருந்தார்.
இந்த தகவல் லண்டன் வாழ் தமிழர்களிடம் பரவியதையடுத்து, முதல்வர் விஜய் தங்கியுள்ள ஹொட்டல் முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிய தொடங்கினர். மேலும், TVK, TVK என முழக்கமிட்டனர்.
லண்டன்லயே என்ன இவ்ளோ கூட்டம் முதல்வருக்கு🥵🔥 pic.twitter.com/KNblC89hAQ
— priya (@PriyankaSmile01) September 15, 2026
அந்த பகுதி ரயில் நிலையம், மருத்துவமனைகள் அடங்கிய பகுதி என்பதால் ஏற்பட்ட இடையூறு காரணமாக அங்கு கூடியிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு லண்டன் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.

ரசிகர்கள் கலைந்து செல்ல மறுத்த போது, முதல்வரின் பாதுகாப்பு அதிகாரியான தர்மராஜன் ஐபிஎஸ் ஒலிபெருக்கி மூலம் "பொதுப் பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக, எங்களுக்கு அனுமதி இல்லாததால் நிகழ்ச்சியை ரத்து செய்கிறோம்,"எனக்கூறி இங்கிருந்து கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

நீண்ட நேரமாக காத்திருந்த ரசிகர்கள் முதல்வர் விஜய்யை சந்திக்க முடியவில்லை என ஏமாற்றமடைந்தனர்.