தவெக தொடங்கி ஓராண்டு நிறைவு.., விரைவில் வெளியாகும் மாவட்ட செயலாளர்கள் பட்டியல்
நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி 2ஆம் திகதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் மாதம் தவெக நடத்திய பிரம்மாண்டமான கட்சி மாநாடு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
தமிழக வெற்றிக்கழகம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற இருக்கும் நிலையில், கட்சிக்கு இதுவரை மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை.
கட்சிக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க கடந்த சில மாதங்களாக நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் ஆலோசனை நடத்தி வந்தார்.
பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்டம் வாரியாக நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டு தற்போது மாவட்ட செயலாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
2 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி ஒரு மாவட்டம் பிரிக்கப்பட்டு, 117 மாவட்ட செயலாளர்கள் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர்கள் பதவிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து அந்த பட்டியலை விஜய்யிடம் புஸ்சி ஆனந்த் வழங்கியுள்ளார்.
இந்த பட்டியலுக்கு தவெக தலைவர் விஜய் விரைவில் ஒப்புதல் வழங்குவார் என்று கூறப்படுகிறது.
மாவட்ட செயலாளர்கள் பட்டியலில் பெண்களுக்கு குறிப்பிடத்தக்க இடங்களை ஒதுக்க வேண்டும் என்று விஜய் அறிவுறுத்தி இருக்கிறார்.
அதனைதொடர்ந்து கட்சியின் முதல் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |