விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்களின் வெற்றி எப்படி சாத்தியமானது?
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது விஜய் மக்கள் இயக்கத்தின் வெற்றி.
புதுக்கோட்டை நகராட்சி 4ஆவது வார்டில் போட்டியிட்ட பர்வேஸ், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சி 3ஆவது வார்டில் போட்டியிட்ட மோகன் ராஜ், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் போட்டியிட்ட வேல்முருகன்,
திருச்சி மாவட்டத்திம் பூவாலூர் பேரூராட்சி 15 ஆவது வார்டில் போட்டியிட்ட V.மேனகா, விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சி 21ஆவது வார்டு சுயேச்சை வேட்பாளர் சைதானி முகமது கவுஸ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
அத்துடன் சென்னையின் ஒரு வார்டில் அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது விஜய் மக்கள் இயக்கம்.
ரசிகர்கள் மட்டுமின்றி அந்த வார்டில் அந்தஸ்து உள்ள, மக்களின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு நெருங்கி பழகும் சுயேட்சை வேட்பாளர்களையும் தாங்களாகவே தொடர்பு கொண்டு ஆதரவு வழங்கியதாம் விஜய் மக்கள் இயக்கம்.
மேலும் 10 தடவைக்கும் மேல் மக்களிடம் வாக்கு சேகரிக்க சென்று அந்த வீட்டு பிள்ளைகளை போன்று பழகியதும், பிரச்சனைகளை தெளிவாக அலசி அதற்கான தீர்வுடன் மக்களிடம் வாக்கு சேகரித்ததும் குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.