தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் யாருடன் கூட்டணி? அதிகாரபூர்வ அறிவிப்பு
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் இந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கவில்லை என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தலைமையிலான விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
பல இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சில முன்னணி கட்சிகளுக்கு ஆதரவு கொடுப்பதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு அதிகாரபூர்வமாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
Official Press Release From #Thalapathy #VijayMakkalIyakkam @actorvijay @BussyAnand @V4umedia_ pic.twitter.com/L8u1QEkkHC
— RIAZ K AHMED (@RIAZtheboss) February 8, 2022
அதன்படி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நடைபெறும் 2022ஆம் ஆண்டின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் அவர்களின் உத்தரவின்படி “தளபதி விஜய் மக்கள் இயக்கம்” எந்த கட்சியுடனும் கூட்டணியோ, ஆதரவோ இல்லாமல் தனித்து போட்டியிடுகிறது.
எனவே தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்காக அனைத்து மாவட்ட தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், ரசிகர்களும் முழுமூச்சுடன் பிரச்சாரம் செய்து தளபதி மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக செய்த நற்பணிகளை மக்களிடத்தில் கொண்டு சேர்த்து நம் இயக்கத்தின் வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.