விஜய்யின் அரசியல் ஆரம்பம்! சுடச்சுட தயாராகும் பிரியாணி விருந்து
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகையை வழங்குகிறார் நடிகர் விஜய்.
சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதில் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொள்கின்றனர், நேற்றே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சென்னை வந்து தங்கவைக்கப்பட்ட நிலையில் காலை உணவை முடித்துக்கொண்டு வண்டலூர் கேளம்பாக்கம் வழியாக நீலாங்கரையை சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மதிய உணவும் தயாராகி வருகிறது, அதற்கான மெனு பட்டியலும் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்யை நேரில் சந்திப்பதில் மகிழ்ச்சி என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜய்யின் சமீபகால நடவடிக்கைகள் அரசியலில் களமிறங்க திட்டமிடுகிறாரா என்ற கேள்வியை எழுப்பாமல் இல்லை.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை, அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் பிறந்தநாளன்று, அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து விஜய் மக்கள் நிர்வாகிகள் மரியாதை செய்தனர்.
மேலும் பேனர் வைக்க வேண்டாம் என அனைத்து தொகுதி நிர்வாகிகளுக்கும் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
உலக பட்டினி தினத்தை முன்னிட்டும், அனைத்து தொகுதிகளிலும் இலவச மதிய உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.