ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஆனால் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எண்களை பெற முடியாததால், கூடுதல் ஆதரவை பெற முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, நிபந்தனையுடன் தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளது.
காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற 5 எம்எல்ஏக்கள், தங்களின் ஆதரவு கடிதத்தை தவெக தலைவர் விஜயிடம் வழங்கினர்.

இன்னும் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை பெற தவெக தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது.
இதற்கிடையில், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு, கூடுதல் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை விஜய் நேரில் சந்தித்து கடிதம் வழங்கினார்.
தவெகவிற்கு ஆதரவளிக்கும் எம்எல்ஏக்களின் கடிதங்களையும் ஆளுநரிடம் சமர்ப்பித்தார்.
இதையடுத்து, ஆளுநர் எப்போது வேண்டுமானாலும் விஜயை ஆட்சி அமைக்க அழைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
#WATCH | Chennai: TVK chief Vijay meets Tamil Nadu Governor Rajendra Arlekar at the Lok Bhavan and stakes claim to form the Government in the State.
— ANI (@ANI) May 6, 2026
(Video: Lok Bhavan, Tamil Nadu) pic.twitter.com/wCwfKQDhzM
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |