விஜய்யை பாராட்டிய சிம்பு பட தயாரிப்பாளர்
கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு இரவு நேர பாடசாலை நடத்தும் திட்டத்தை தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டுள்ளார் பிரபல தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி.
சமீப காலங்களாகவே விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் நடிகர் விஜய்.
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை பலரும் பாராட்டினார்கள், தொடர்ந்து காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு இரவு நேர பாடசாலையை விஜய் தொடங்க திட்டமிட்டுள்ளார்.
நாளை ஜூலை 15-ஆம் தேதி முதல் இந்த திட்டம் தொடங்கவுள்ளது, இந்நிலையில் பல வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, விஜய்யை பாராட்டி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், "எத்தனையோ குழந்தைகள் இன்னமும் இரவு நேரம் படிக்க வசதி இல்லாமல் தவிக்கிறார்கள். மதிப்பெண்களால் வெற்றிபெற்று நாளிதழ்களில் மின்னொளியில் படித்தேன்... மண்ணெண்ணெய் விளக்கில் படித்தேன் என மாணாக்கர்கள் சொல்லும்போதுதான் அவர்களின் வறுமை புரிய வருகிறது.
அப்படியிருக்க, தமிழ் சினிமாவில் கோலோச்சும் நாயகன் விஜய் அவர்கள் இரவுப் பாடசாலை திட்டத்தை செயல்படுத்த முன்வந்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. தான் நிஜ கதாநாயகன் என தன் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டிருப்பது கல்விச் செல்வம் தளைக்க மிக மிக அவசியமானது. தொடர்க. வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
எத்தனையோ குழந்தைகள் இன்னமும் இரவு நேரம் படிக்க வசதி இல்லாமல் தவிக்கிறார்கள். மதிப்பெண்களால் வெற்றிபெற்று நாளிதழ்களில் மின்னொளியில் படித்தேன்... மண்ணெண்ணெய் விளக்கில் படித்தேன் என மாணாக்கர்கள் சொல்லும்போதுதான் அவர்களின் வறுமை புரிய வருகிறது. அப்படியிருக்க, தமிழ் சினிமாவில்…
— sureshkamatchi (@sureshkamatchi) July 13, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |