கமல் விடயத்தில் அப்பட்டமான தவறு செஞ்சுட்டீங்க.., விஜயை விமர்சித்த ஜேம்ஸ் வசந்தன்

Kamal Haasan Vijay James Vasanthan Seeman
By Sathya Nov 09, 2024 11:20 AM GMT
Report

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நிலையில் ஜேம்ஸ் வசந்தன் விஜயை கடும் விமர்சனம் செய்துள்ளார்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த ஒக்டோபர் மாதம் 27 -ம் திகதி விக்கிரவாண்டியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தவெக கட்சியின் தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். ஆனால், அதற்கு முன்னதாக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்காதது பேசுபொருளானது.

விஜய்க்கு எதிர்ப்பு

இது தொடர்பாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில், "அரசியல் பின்புலமே இல்லாமல், அதில் ஒரு ஈடுபாடு இருக்கிறதென்பதை சூசகமாகக் கூட மக்களுக்குச் சொல்லாமல், சடாரென குதித்த விஜய்தான் அண்மைக்காலத் தமிழக அரசியல் விவாதப் பொருள்.

இவர் ஏன் வரவேண்டும்? இங்கில்லாத எதை இவர் வந்து தரப்போகிறார்? என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிடுவார்? இவைதான் வாக்களார்கள் மனதிலுள்ள கேள்விகள். விடைகளுக்காகக் காத்திருக்கின்றனர்.

கமல் விடயத்தில் அப்பட்டமான தவறு செஞ்சுட்டீங்க.., விஜயை விமர்சித்த ஜேம்ஸ் வசந்தன் | Vijay No Wish Fo Kamal Birthday James Vasanthan

இதனால் அவருடைய ஒவ்வொரு சொல்லும் செயலும் கூர்ந்து கவனிக்கப்படுகின்றது. இதை விஜய்யும் அறிவார். இருந்தும் ஒரு தவற்றை இவ்வளவு தொடக்கத்திலேயே செய்தது மக்களை சிந்திக்க வைத்திருக்கிறது.

அன்புமணி ராமதாஸ் இரண்டாம் தலைமுறை அரசியல்வாதி. சில சூழல்களில் அரசியல் பார்வையின் வழியாக சில திரைப்படங்களைக் கூட எதிர்த்தவர்கள் அவர்கள். திரைப்பட நாயகர்களையும் விமர்சித்தவர்கள்.

விஜய்க்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இருந்தும், அண்மையில், அவரைத் தொலைபேசியில் அழைத்து பிறந்த நாள் வாழ்த்துச் சொல்கிறார். நல்ல விஷயந்தான். இது அரசியல் பண்பு.

நேற்று சீமானுக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்கிறார். ஆனால், இரு நாட்களுக்கு முன்பு பிறந்த நாள் கொண்டாடிய கமல்ஹாசனுக்குச் சொல்லவே இல்லை. குறிப்பிடும்படியான அவருடைய 70-வது பிறந்த நாள் வேறு!

கமல் விடயத்தில் அப்பட்டமான தவறு செஞ்சுட்டீங்க.., விஜயை விமர்சித்த ஜேம்ஸ் வசந்தன் | Vijay No Wish Fo Kamal Birthday James Vasanthan

கமல் உங்கள் துறையின் மூத்த கலைஞர். நீங்கள் பிறக்கும் முன்பே அவர் நடிகர். புதுமைகளுக்கு முன்னோடி. பல்கலை வித்தகர். இந்தியத் திரைப்படத்துறையின் உயர்ந்த கலைஞரில் ஒருவர்.

எல்லாராலும் பெரிதும் மதிக்கப்படுகிறவர். இவையனைத்தையும் தாண்டி, ஒரு அரசியல் கட்சித்தலைவர். அப்பட்டமான ஒரு தவற்றைச் செய்துவிட்டீர்கள், விஜய்! நீங்கள் என்ன காரணம் சொன்னாலும், அதை ரசிகர்களும், வாக்காளர்களும், பொதுமக்களும் ஏற்கப் போவதில்லை" என்று கூறியுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US