சென்னைக்கு வரவழைக்கப்பட உள்ள பாதிக்கப்பட்ட மக்கள்? - விஜய் திட்டத்தில் முக்கிய மாற்றம்
விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ள நிலையில், அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கரூர் நெரிசல் சம்பவம்
கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. உயிரிழந்தவர்களுக்கு குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் வழங்குவதாக விஜய் தெரிவித்த நிலையில், அதனை அந்த குடுமப்த்தினரின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.
மேலும், அந்த குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறிய விஜய், விரைவில் நேரில் சந்திப்பதாக தெரிவித்தார்.
பனையூரில் சந்திப்பு?
இதைத்தொடர்ந்து, கரூர் செல்வதற்கு பாதுகாப்பு கேட்டு தவெக தரப்பில் டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க திட்டமிடப்பட்டது. ஆனால் மண்டபம் கிடைப்பதில் சிக்கல் நிலவியது.

சம்பவம் நடந்து ஒரு மாதமாக உள்ள நிலையில், தற்போது வரை விஜய் பாதிக்கப்பட்ட்ட மக்களை நேரில் சந்திக்கவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்னைக்கு வரவழைத்து பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |