நடிகர் விஜய்யின் கட்சி பெயர் குறித்து சீமான் கருத்து: மக்கள் வாக்கு யாருக்கு?
நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துள்ள நிலையில், அது குறித்து நாம் தமிழர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
சீமானின் கருத்து
விஜய் மக்கள் இயக்கமாக செயல்பட்டுக் கொண்டிருந்த விஜயின் ரசிகர் மன்றம் இன்று அரசியல் கட்சியாக மாறியுள்ளது.
அக்கட்சியானது 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
#தமிழகவெற்றிகழகம் #TVKVijay pic.twitter.com/ShwpbxNvuM
— TVK Vijay (@tvkvijayoffl) February 2, 2024
இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், " 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயர் நன்றாக இருகிறது. அதை வரவேற்கிறேன். என்ன பெயர் வைக்கலாம் என பல பெயர்களை வைத்து பரீசலித்துக் கொண்டு இருந்தார். அதில் இந்த பெயரை தேர்வு செய்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது.
அதில் திராவிடம் என்ற சொல் இல்லாததே பெரிய மகிழ்ச்சி தான். அவருக்கான வாக்கு அவருக்கு, எனக்கான வாக்கு எனக்கு.
அதில் கழகம் என்று இருப்பது தி.மு.க மற்றும் அ.தி.மு.க இற்கு ஒப்பந்தம் போட்டு கொடுக்கவில்லை. அந்த வார்த்தை ஓர் கூட்டமைப்பிற்கு கூறப்படுவதாகும். கழகம் என்பதை யார் வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளலாம்.
அரசியலை தொடங்குவது எளிது, தொடருவது தான் கடினமான விடயம். தொடக்கத்தில் இருக்கும் ஆர்வமும் ஈடுபாடும் இறுதி வரை இருந்தால் யாரும் வெல்லலாம்.
இன்றைய நாட்களில் இருக்கும் அரசியலில் நடிகை மற்றும் நடிகர்களை வைத்து மட்டுமே ஆட்சி அமைத்துவிட முடியாது. இந்த சேவை பெருமளவிலான மக்களை சென்றடைய வேண்டும். அதற்கு பல ஆண்டுகள் உழைப்பு தேவை.
மண்ணை வெல்ல வேண்டும் என்றால் முதலில் மக்கள் மனங்களை தம்பி வெல்ல வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |