சிபிஐ விசாரணை - தேர்தல் தொடர்பாக விஜய் வைத்த கோரிக்கை
தேர்தல் திகதி வெளியான நிலையில் சென்னையில் ஆஜராக அனுமதிக்குமாறு சிபிஐயிடம் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.
சிபிஐ விசாரணை
தமிழக சட்டமன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது பணியை தீவிரப்படுத்தியுள்ளன.
இதனிடையே நேற்று கரூர் கூட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ அனுப்பிய சம்மன் அடிப்படையில் டெல்லி சென்ற தவெக தலைவர் விஜய், சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி 7 நடைபெற்ற விசாரணையில் விளக்கமளித்தார்.

முன்னதாக 2 முறை விசாரணைக்காக டெல்லி சென்ற நிலையில், இது 3ஆம் கட்ட விசாரணை ஆகும்.
விஜய் கோரிக்கை
இந்நிலையில், வேட்பாளர் தேர்வு, தேர்தல் பரப்புரை உள்ளிட்ட தேர்தல் பணிகள் உள்ளதால் டெல்லி வந்து செல்வதில் சிரமம் உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
புதுச்சேரியில் தவெக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் தவெக தலைவர் விஜய் இன்று தவெக தலைமை அலுவலகமான பனையூரில் வைத்து நேர்காணல் நடத்துகிறார்.

தவெக அதிமுக கூட்டணியில் இணைய உள்ளதாகவும், விஜய்க்கு துணை முதல்வர் பதவி தர உள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில், விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடனே கூட்டணி என செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |