மனசுக்கு ரொம்ப பதட்டமா இருக்கு.., வாகனத்தை பின்தொடர வேண்டாம் என தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்
மதுரை விமான நிலையத்திற்கு வந்திருக்கும் தொண்டர்கள் என்னுடைய வாகனத்தை பின்தொடர வேண்டாம் என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விஜய் வேண்டுகோள்
நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெறவுள்ளதால் இன்று மாலை விஜய் தனி விமானம் மூலம் மதுரை வந்து சாலை வழியாக செல்லவுள்ளார்.
இந்த தகவலை அறிந்த விஜய் கட்சியின் தொண்டர்கள் இன்று காலை முதலே விமான நிலையத்தில் குவிய தொடங்கினர். இதனால் தவெக தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் முற்றியது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஜய், "மதுரை விமான நிலையத்தில் நம் நண்பர்கள், நண்பிகள், தோழர்கள், தோழிகள் அனைவரும் வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் கோடான கோடி வணக்கம்.
விரைவில் மதுரை மண்ணிற்கு வருவேன். இப்போது நான் கொடைக்கானலுக்கு படப்பிடிப்புக்காக செல்கிறேன். அங்கு வந்து உங்களை சந்தித்து விட்டு எனது வேலைக்காக சென்றிடுவேன். நீங்களும் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லுங்கள்.
யாரும் வாகனத்தை பின் தொடர வேண்டாம். பைக்கில் வேகமாக வருவது போன்ற காட்சிகளை பார்க்கும்போது மனசுக்கு பதட்டமாக இருக்கிறது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |