தவறாக எடுத்துக்காதீங்க.., நேரில் வந்து நிவாரணம் வழங்காததற்கு விஜய் விளக்கம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளார்.
விஜய் விளக்கம்
ஃபெங்கல் புயல் காரணாமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அந்தவகையில், விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தற்போது, புயல் கரையை கடந்து இரண்டு நாட்கள் ஆகியும் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீர் வடியவில்லை. இதனால், அங்குள்ள மக்கள் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இதையடுத்து, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை தொண்டர்கள் வழங்க வேண்டும் என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வலியுறுத்தினார்.
இந்நிலையில், டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்த 250 குடும்பத்தினரை பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்திற்கு விஜய் வரவழைத்து நிவாரண பொருட்கள் வழங்கினார்.
#தமிழகவெற்றிக்கழகம் @tvkvijayhq pic.twitter.com/FmDjSeVCxw
— Vijay Fans Trends (@VijayFansTrends) December 3, 2024
அப்போது, அவர்களிடம் சிறிது நேரம் பேசினார். அவர் பேசுகையில், "உங்களுடைய பகுதிக்கு நேரில் வந்து நிவாரணம் வழங்கியிருக்கலாம். ஆனால், இவ்வாறு உங்களுடன் சகஜமாக உட்கார்ந்து பேச முடியாது.
நெரிசல் ஏற்பட்டுவிடும். அதனால் தான் இங்கு அழைத்து வந்து வழங்குகிறேன். நேரில் வந்து நிவாரணம் வழங்கவில்லை என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |