நாகப்பட்டினத்தில் விஜய் பேசியது தவறான தகவல்கள்.., ஆதாரத்துடன் நிரூபித்த தமிழ்நாடு அரசு
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பேசிய தகவல்கள் தவறானது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தவறான தகவல்கள்
அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது அரசியல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றார்.
அதில் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வரும் விஜய், நேற்று நாகப்பட்டினம் மக்களை சந்தித்து அரசு நிறைவேற்றாத திட்டங்களை சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், விஜய் பேசிய தகவல்கள் தவறானது என்று பட்டியல் போட்டு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் என்ற பக்கத்தில் வெளியிடப்பட்ட தகவலில், "நாகையில் அலையாத்திக் காடுகள், கடல்சார் கல்லூரி, காவல்துறை நிபந்தனைகள் குறித்து விஜய் கூறிய தவறான தகவல்கள்!
தவறான தகவல் 1 :
“மண் அரிப்பைத் தடுக்க உருவாக்கப்பட்ட அலையாத்திக் காடுகளைக் காக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உண்மை :
தமிழ்நாட்டில் சதுப்புநில காடுகள்/ அலையாத்திக் காடுகளின் பரப்பளவு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
அரசின் முயற்சியால் கடந்த 2021 ஆம் ஆண்டில் 45 சதுர கிலோமீட்டராக இருந்தவை இன்று 90 சதுர கிலோமீட்டராக பெருகியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 586 ஹெக்டேர் நிலப்பரப்பிலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 521 ஹெக்டேர் நிலப்பரப்பிலும் சதுப்புநில காடுகள் அமைந்துள்ளன.
தவறான தகவல் 2 :
கடல்சார் கல்லூரி ஏதும் நாகப்பட்டினத்தில் இல்லை.
உண்மை:
தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகமும் நாகப்பட்டினத்தில் இயங்கி வருகிறது.
தவறான தகவல் 3 :
மக்களை சந்திப்பதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். அனுமதி இல்லை என்கிறார்கள். பிரதமரோ, உள்துறை அமைச்சரோ தமிழ்நாட்டு வரும்போது நிபந்தனைகளைப் போடுவீர்களா?
உண்மை :
சென்னையில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி பிரதமரின் பேரணிக்கு காவல்துறை 20 நிபந்தனைகளை விதித்தது.
தவறான தகவல்களைப் பரப்பாதீர்" என கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |