தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் எங்கே நடக்கிறது? வெளியான தகவல்
விஜய்யின் தவெக தொடங்கி ஒரு ஆண்டு நிறைவு பெற்றதை அடுத்து, முதல் ஆண்டு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக பொதுக்குழு கூட்டம்
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி கடந்த 2ஆம் திகதியுடன் ஒரு ஆண்டு முடிந்து இரண்டாம் ஆண்டு தொடங்கியுள்ளது.
கட்சியின் உள் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை விஜய் நியமனம் செய்து வருகிறார்.
அடுத்ததாக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வியூகம் அமைப்பது தொடர்பான பணிகளில் விஜய் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி தனியார் விடுதியில் விரைவில் நடைபெற இருக்கிறது.
இதைத்தொடர்ந்து பொதுக்குழு நடைபெறும் இடம், வாகன நிறுத்தும் இடங்கள், பங்கேற்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்வு செய்யப்பட்ட அரங்குகளை கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி என். ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை குழு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகள் வந்து செல்லும் வண்ணம் அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |