முதல்வர் விஜய் விவாகரத்து வழக்கு - 20 நிமிடங்கள் காணொளியில் வாதம் செய்த சங்கீதா
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில், 20 நிமிடங்கள் காணொளியில் சங்கீதா வாதம் செய்த நிலையில், திகதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு
தவெக தலைவர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகியுள்ளார்.

விஜய் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு விவாகரத்து கோரி மனு அளித்தார்.
அந்த மனுவில் கணவர் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
இருவரும் காணொளி காட்சி வாயிலாக ஆஜராக அனுமதிக்க வேண்டுமென இருதரப்பு வழக்கறிஞர்களும் கோரிக்கை விடுத்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
ஆனால் தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றுள்ளதால், அவரால் விவாகரத்து வழக்கு தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
சங்கீதா காணொளி வாயிலாக ஆஜராகி 20 நிமிடங்கள் தனது வாதத்தை முன்வைத்தார். வாதத்தை கேட்ட நீதிபதி, திகதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |