விமான நிலையத்தில் நடந்தது இதுதான்! மர்ம நபரால் எட்டி உதைக்கப்பட்ட சம்பவம் குறித்து மெளனம் கலைத்த நடிகர் விஜய் சேதுபதி
விமான நிலையத்தில் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விஜய் சேதுபதி மெளனம் கலைத்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள பெங்களூரு சென்ற விஜய் சேதுபதியை விமான நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் எட்டி உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவும் இணையத்தில் வெளியானது இந்த சம்பவத்தில் தொடர்புடைய அந்த நபர் தனது பெயர் மகா காந்தி என்று கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி தேசிய விருது வாங்கியதற்காக அவருக்கு வாழ்த்து சொன்னாராம். பிறகு குரு பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டீர்களா என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு விஜய் சேதுபதி யார் குரு என்று கேட்டிருக்கிறார். அந்த சமயத்தில் வாக்குவாதம் முற்றி, விஜய் சேதுபதியுடன் இருந்தவர்கள் தன்னை தாக்கியதாகவும், தான் திருப்பி தாக்கியதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பில் விஜய் சேதுபதியின் விளக்கம் வேறு மாதிரியாக உள்ளது.
தாக்கிய நபர் குடிபோதையில் இருந்ததாகவும், அவர் மாஸ்க் அணிந்திருந்ததால் அது வெளியே தெரியவில்லை என்றும், செல்போனில் ஒருவர் வீடியோ எடுத்த விவகாரம் ஊதி பெரிதாக்கப்பட்டதாகவும், தாக்கிய நபரை காவல் நிலையம் அழைத்துப் போய் அப்போதே பிரச்சனை தீர்க்கப்பட்டது எனவும் கூறியுள்ளார்.
நான் பாதுகாவலர்களுடன் பயணம் செய்வதில்லை. என்னுடைய நெருங்கிய நண்பரைத்தான் அழைத்துச் சென்றேன். பாதுகாவலர்களை வைத்துக் கொள்ள எனக்கு விருப்பமில்லை.
நான் மக்களை சந்திக்க வேண்டும், அவர்களுடன் பேச வேண்டும் என்று விஜய் சேதுபதி மேலும் கூறியுள்ளார்.