சர்வதேச எம்மி விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் சேதுபதி
மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி சர்வதேச எம்மி விருது வழங்கும் விழாவில் விருது வழங்கி இந்திய திரையுலகிற்கு பெருமை சேர்க்க உள்ளார்.
விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிவருவதுடன், இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பத்தா திரைப்படம் நல்ல வசூலை பெற்று வருகின்றது.
அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் சாய் பல்லவியுடன் நடித்து வருகின்றார். அடுத்தடுத்து பல படங்களை நடித்து பரபரப்பாக இருக்கும் விஜய் சேதுபதி சர்வதேச எம்மி விருது நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றார்.

நவம்பர் 23ம் தேதி நியூயார்க்கில் நடைபெற உள்ள 54வது சர்வதேச எம்மி விருது விழாவில், வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்குவதற்கு விஜய்சேதுபதி செல்கின்றார்.
குறித்த சர்வதேச எம்மி விருதுகள் மேடையில் இந்திய நடிகர் ஒருவர் விருது வழங்குவது என்பது இதுவே முதல்முறையாகும். அதுமட்டுமின்றி இந்திய திரையுலகிற்கு மாபெறும் பெருமையை சேர்த்து சாதனை படைக்கவும் உள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
இதன் பின்னணியில் சர்வதேச தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாடமியின் நிர்வாக வாரிய உறுப்பினரும், தயாரிப்பாளருமான கவிதா குப்தா இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |