சம்பளமே வாங்காமல் நடித்த விஜய் சேதுபதி.., அசர வைக்கும் அவரின் சொத்துமதிப்பு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகர் விஜய் சேதுபதி.
துபாயில் கணக்காளராக வேலைப்பார்த்து வந்த இவர் சினிமா மீது இருந்த காதலால் திரைத்துரைக்குள் நுழைந்தார்.
சிறிய சிறிய கதாபத்திரத்தில் நடித்த இவருக்கு சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
அதன் பிறகு இவர் நடித்த "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூதுகவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" என அவர் நடித்த படங்கள் வரிசையாக வெற்றியடைந்தது.
ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று இல்லாமல் வில்லனாகவும் நடித்த "பேட்ட, மாஸ்டர், விக்ரம், ஜவான்" ஆகிய படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றது.
தற்போது இவர் நடித்த 50 ஆவது படமான மகாராஜாவின் மொத்த பட்ஜெட் ரூ.20 கோடிதான் என்பதால் இந்த படத்தில் விஜய்சேதுபதி சம்பளம் இல்லாமல் நடித்ததாகவும், படம் வெற்றியடைந்த பிறகு படத்தின் லாபத்தில் இருந்து அவர் பங்கு வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
அவரது நடிப்பில் அடுத்ததாக விடுதலை 2, டர்போ 2, Ace, ட்ரெய்ன் ஆகிய படங்கள் வரவிருக்கின்றன.
இந்நிலையில், விஜய் சேதுபதியின் அசரவைக்கும் சொத்துமதிப்பு குறித்து பார்க்கலாம்.
விஜய் சேதுபதி வில்லனாக நடித்து கடந்த ஆண்டு வெளியான ஜவான் படத்தில் நடிப்பதற்காக அவர் 21 கோடி சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.
அதேபோல, இவரது மெர்ரி கிறிஸ்துமஸ் படமும் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் நடிப்பதற்காக அவர், ரூ.21 கோடி சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது.
மேலும், விஜய் சேதுபதி விளம்பர படங்களில் நடிக்க ரூ.50 லட்சம் வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.
இவருக்கு, சென்னையில் உள்ள கீழ்பாக்கம் மற்றும் எண்ணூரில் இரண்டு வீடுகள் சொந்தமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி இவரிடம் ரூ. 1.76 கோடி மதிப்பு மிக்க BMW 7 series கார், சுமார் 39 லட்சம் மதிப்புமிக்க Mini Cooper Car, Toyota மற்றும் Innova ஆகிய சொகுசு கார்களை வைத்துள்ளார்.
ஆடம்பர வீடு, சொகுசு கார்கள், மாத வருமானம் என எல்லாம் சேர்த்து விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு ரூ.175 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |