Bigg Boss 8: முத்துக்குமரன் தான் டைட்டில் வின்னர்- மறைமுகமாக கூறிய விஜய் சேதுபதி
தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.
இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியம் குறையாமல் நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 6ஆம் திகதி தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் 23 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டிற்குள் உள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களாக டபுள் எலிமினேஷன் நடந்தது. முதலில் ஆர்.ஜே. ஆனந்தி மற்றும் சாச்சனா இருவரும் டபுள் எலிமினேஷன் செய்யப்பட்டனர்.
அதனை தொடர்ந்து கடந்த வாரம் சத்யா மற்றும் தர்ஷிகா இருவரும் வெளியேறினார்கள்.
இந்நிலையில், 13 போட்டியாளர்களுடன் 10 வாரங்கள் முடிந்து தற்போது 11வது வாரம் துவங்கியுள்ளது.
நேற்று ஒளிபரப்பான எபிசோடில், எலிமினேஷன் முடிந்தபின், போட்டியாளர்களைத் தனியாக கன்பெக்ஷன் ரூமிற்கு அழைத்து பேசினார் விஜய் சேதுபதி.
அப்போது முத்துக்குமரன், "105வது நாளில் உங்களுடன் மேடையில் நிற்கவேண்டும்.., நீங்கள் என்ன அடைய விரும்புகிறீர்களோ, அது உங்கள் கைவசம் வரும் என நான் நம்புகிறேன்" என கூறினார்.
விஜய் சேதுபதி இப்படிக் கூறியவுடன், முத்துக்குமரன் டைட்டில் வின்னர் என்பதை தான், அவர் மறைமுகமாகக் கூறி வருகிறார் என முத்துக்குமரனின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |