இந்த குழந்தையை காப்பாற்ற 16 கோடி வேண்டும்! நடிகர் விஜய் சேதுபதி உதவி கேட்டு வெளியிட்டுள்ள வீடியோ
பிரபல திரைப்பட நடிகரான விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர், நடிப்பை தாண்டி தன்னால் மக்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதையும் அவர் செய்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது தஞ்சாவூரை சேர்ந்த பாரதி என்கிற குழந்தைக்கு தசைநார் சிதைவு நோய் உள்ளது. இது ஒரு அரிய வகை நோய் என்பதால், அந்த நோய்க்கு இரண்டு வயதிற்குள் ஊசி போட வேண்டும். குழந்தை பிறந்து தற்ப்போது 21 வயது மாதம் ஆகிவிட்டது.
இதனால் உடனடியாக அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
— VijaySethupathi (@VijaySethuOffl) September 27, 2021
இதற்கு அளிக்கப்படும் அந்த சிகிச்சை ஊசியின் விலை 16 கோடி ரூபாய் ஆகும், அந்த அளவுக்கு பணம் செலவு செய்யும் அளவுக்கு பாரதியின் பெற்றோரின் நிதி நிலை இல்லை என்பதால் தங்களை மகளை காப்பாற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் குக் வித் கோமாளி புகழ், அறந்தாங்கி நிஷா, செந்தில், ராஜலட்சுமி, ரியோ ராஜ் உள்ளிட்டோர் பாரதிக்கு உதவி செய்யுமாறு பேசிய வீடியோ வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோவை தற்போது விஜய்சேதுபதி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
குழந்தை பாரதிக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் பணம் அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு விபரமும் அந்த வீடியோவில் இருக்கிறது.
அதுமட்டுமின்றி, கூகுள் பே, போன் பே எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியின் டுவீட்டை பார்த்தவர்கள் பாரதிக்கு பணம் அனுப்பியதற்கான ஆதாரத்தை பதிவிட்டு வருகின்றனர்.