ஐரோப்பிய டி20 போட்டியில் தனியாளாக ருத்ரதாண்டவம் ஆடிய தமிழக வீரர்
Vijay Shankar 67 runs in 43 balls european t20: கிளாஸ்கோவ் கோஸ்மிக் அணிக்கு எதிரான போட்டியில் விஜய் ஷங்கர் அரைசதம் விளாசினார்.
ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் போட்டியில், டப்லின் கார்டியன்ஸ் வீரர் விஜய் ஷங்கர் 43 பந்துகளில் 67 ஓட்டங்கள் விளாசினார்.
டப்லின் கார்டியன்ஸ்
தி வில்லேஜ் மைதானத்தில் நடந்து வரும் ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் போட்டியில், கிளாஸ்கோவ் கோஸ்மிக் மற்றும் டப்லின் கார்டியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
Vijay Shankar smashed 67(43) with 6 fours and 3 sixes against Glasgow Cosmic in ETPL.
— CricketGully (@thecricketgully) September 12, 2026
pic.twitter.com/b2GBvnAnFU
முதலில் துடுப்பாடிய டப்லின் கார்டியன்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
எனினும், தமிழக வீரரான விஜய் ஷங்கர் (Vijay Shankar) அதிரடியாக 43 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 67 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் டப்லின் கார்டியன்ஸ் 19.3 ஓவர்களில் 159 ஓட்டங்கள் எடுத்தது. அலி கான் 4 விக்கெட்டுகளும், டைமல் மில்ஸ் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |