சிறுபான்மை மதத்தில் பிறந்த நடிகர் விஜய் மோடியை எதிர்க்க வேண்டும்: பழ. கருப்பையா அட்வைஸ்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தின் தலைவருமான பழ. கருப்பையா நடிகர் விஜயின் அரசியல் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
விஜயின் அரசியல்
நடிகர் விஜயின் அரசியல் குறித்து பழ.கருப்பையா பேசுகையில், "நடிகர் விஜயின் செயல்பாடுகள் அனைத்தும் அவர் அரசியலுக்கு வருவதை நோக்கியே உள்ளது. நான் ஒரு சாதாரண மனிதன். என்னுடைய ஆதரவு அவருக்கு முக்கியமா என்பதை தவிர மக்களின் ஆதரவே அவருக்கு முக்கியம்.
மக்களின் பிரச்சனையை அறிந்து, அதற்கு அவர் தீர்வு கொண்டு வந்தால் வருங்காலத்தில் விஜய் தான் தன்னிகரற்ற தலைவராக இருப்பார்" என்றார்.
மோடியை எதிர்க்க வேண்டும்
மேலும் பேசிய அவர், "நான் தமிழ்நாடு தன்னுரிமை கழகம் என்ற கட்சி தொடங்கிய பிறகு காவிரி பிரச்சனை உள்ளிட்ட சில விடயங்களுக்கு தீர்வு கொடுத்துள்ளேன்.
அதை போல, இந்த மாதிரியான காலகட்டம் வரும் சமயங்களில் நடிகர் விஜயும் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்ல வேண்டும். அப்போது தான் அவரால் வெற்றியை எதிர்கொள்ள முடியும்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அரசு சிறுபான்மை மதத்திற்கு எதிராக உள்ளது. அதனால், சிறுபான்மை மதத்தில் பிறந்த நடிகர் விஜய் மோடிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் மக்களுக்கு அவர் மீது நம்பிக்கை வரும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |