ஐசரி கணேஷின் மகள் மற்றும் மருமகனுக்கு ஸ்பெஷல் விருந்து வைக்கும் விஜய்
தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில் தம்பதியினருக்கு நடிகர் விஜய் ஸ்பெஷல் விருந்து வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விருந்து வைக்கும் விஜய்
சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. திருமணத்திற்கும், அதன் பின்னர் நடைபெற்ற திருமண வரவேற்பிற்கும் சினிமா பிரபலங்கள் தொடங்கி அரசியல் பிரபலங்கள் வரை பலரும் வருகை தந்திருந்தனர்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகை ஷாலினி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது பெற்றோர் மட்டுமே கலந்து கொண்டனர்.
அதோடு அவருடைய கட்சி சார்பாக ஆதவ் அர்ஜுனா மட்டுமே கலந்து கொண்டார். திருமண வரவேற்பில் 25,000 பேருக்கு மேல் கலந்து கொண்டதால் விஜய் வந்திருந்தால் மேலும் கூட்டம் சேரும் என்பதற்காக அவர் கலந்து கொள்ளவில்லை என்று கூறுகிறார்கள்.
இந்நிலையில், ஐசரி கணேஷின் மகள் மற்றும் மருமகனுக்கு ஸ்பெஷல் விருந்து ஒன்றை விஜய் வைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |