விஜய் நடித்த ஷாஜகான் பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்!
விஜய் நடிப்பில் வெளியான ஷாஜஹான் பட இயக்குநர் இன்று மாரடைப்பால் உயிர்ந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
பிரபல இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் ரவி. அவர் ஆச்சார்யா படத்தை இயக்கிய பின்பு ஆச்சார்யா ரவி என்று அழைக்கப்பட்டார்.
இவர் அனைத்துக்கும் ஆசைப்படு, டம்மி டப்பாசு, விண், விஜய் நடிப்பில் வெளியான ஷாஜஹான், அரவிந்த சாமி நடிப்பில் வெளியான என் சுவாசக் காற்றே, பிரபு நடிப்பில் வெளியான தர்மசீலன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் இவர் உடல் நலக்குறைவால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை மாரடைப்பால் காலமாகியுள்ளார்.
இச்செய்தி திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.